< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
தென்காசி
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

தினத்தந்தி
|
12 Sept 2023 12:15 AM IST

மாதாப்பட்டினம் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கடையம்:

கடையம் அருகே மாதாப்பட்டினம் சற்குண சத்ய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. கடையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மகேஷ் மாயவன் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 269 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா அனைவரையும் வரவேற்றார். விழாவில் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ரவி சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.பி.அருள், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், கீழப்பாவூர் பொன் செல்வன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் காளிதுரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குமார், ஐந்தாம்கட்டளை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுதன், ஒன்றிய கவுன்சிலர் பாலக செல்வி பாலமுருகன், கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், முருகன், காமராஜ், முத்து, நிர்வாகிகள் கதிரேசன், திரவியம், கருத்தப்பாண்டி, ராமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் நன்றி கூறினார்.


மேலும் செய்திகள்