< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
22 Sept 2023 1:30 AM IST

கொடைக்கானலில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை நகராட்சி தலைவர் செல்லத்துைர வழங்கினார்.

தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள ஆர்.சி.நகர மேல்நிலைப்பள்ளி, நாயுடுபுரத்தில் உள்ள புனித சேவியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மாயக்கண்ணன், முன்னா நகராட்சி தலைவர் முகமது இப்ராஹிம், மூஞ்சிக்கல் ஆர்.சி பள்ளி தாளாளரும், வட்டார அதிபருமான சிலுவை மைக்கேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். இதில் நகராட்சி கவுன்சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்