< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
|25 July 2023 12:15 AM IST
பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
சிவகங்கை
தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லாத சைக்கிள் வழங்கும் விழா சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாவதி வரவேற்று பேசினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் 210 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் சிவகங்கை நகர சபை தலைவர் துரை ஆனந்த், துணைத்தலைவர் கார் கண்ணன், 1-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை சம்பூரணம் நன்றி கூறினார்.