< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
மணப்பாடு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
|28 Sept 2022 12:15 AM IST
மணப்பாடு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கி 90 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். துணை தலைவர் மீரா சிராசுதீன், மணப்பாடு ஊராட்சி தலைவர் கிரேன் சிட்டா வினோ, புனித யாகப்பர் தேவாலய துணை பங்குத்தந்தை அமல்ராஜ், புனித யாகப்பர் தேவாலய பங்கு கமிட்டி தலைவர் திபூர் சியான், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் வலன்டின் இளங்கோ வரவேற்றார். இதில் தி.மு.க வைச் சேர்ந்த பிரகாஷ், மிராஜ், மெஞ்ஞானபுரம் ஊராட்சி துணைத் தலைவர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தலைமையாசிரியர் (பொறுப்பு) அருள் பர்னாந்து நன்றி கூறினார்.