கள்ளக்குறிச்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
|அரகண்டநல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ் அன்பு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பிரபு, ரவிச்சந்திரன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் கஜிதாபீவி மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் தொழிலதிபர் எம்.எஸ்.கே.அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது விலையில்லா சைக்கிள்களை பெறும் மாணவ-மாணவிகள் முதல்-அமைச்சரின் எண்ணம் ஈடேறும் வகையில் நன்கு படித்து நல்லதொரு வேலைவாய்ப்பையும் பெற்று உங்கள் குடும்பத்தையும், நீங்கள் பிறந்த கிராமத்தையும் நல்ல நிலைக்கு உயர்த்த பாடுபட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமிஉமேஸ்வரன், ஒன்றியக்குழு துணை தலைவர் மனம்பூண்டி மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பிரதிநிதி ராஜ்மோகன் நன்றி கூறினார்.