கரூர்
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
|அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டன.
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் வாசுகி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயபால், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு 33 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.இதேபோல ஆர்.டி.மலை, கீழவெளியூர், கூடலூர், தோகைமலை, செங்குளம் அரசு பள்ளிகளிலும் மொத்தம் 952 மாணவ-மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள்களை மாணிக்கம் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில், முன்னாள் தலைவர் காந்தி, மாவட்ட பிரதிநிதி சந்திரன், விவசாய அணி அமைப்பாளர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்னம்மாள் பாலமூர்த்தி, ராஜலிங்கம், சுகந்தி சசிகுமார், அடைக்கலம், தனமாலினி கந்தசாமி, லட்சுமி உள்பட கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.