< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
கரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
2 Aug 2023 12:16 AM IST

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) செல்வமணி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கே.கருணாநிதி, எலவனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை கயல்விழி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். முடிவில் பள்ளியின் முதுகலை ஆசிரியை பூரணி நன்றி கூறினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து சின்னதாராபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தும்பிவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. விலையில்லா சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

மேலும் செய்திகள்