< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
சிவகங்கை
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
2 Aug 2022 12:04 AM IST

அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் சின்னையா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை தேவிகாராணி அனைவரையும் வரவேற்றார்.

இதில் 406 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் யூனியன் துணை தலைவர் மூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பையா, ஈஸ்வரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கண்ணன், வேல்பாண்டி, மாரிதாசன், சித்ராஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் வெங்கட்மோகன் நன்றி கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்