< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
திருவாரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
21 Sept 2023 12:15 AM IST

கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கொரடாச்சேரி:

கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை பூந்தமிழ்ப்பாவை தலைமை தாங்கினார். இதில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 152 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி செல்வமுருகன், பள்ளி புரவலர் கலைவேந்தன், பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, மன்னார்குடி ஒன்றியக்குழு உறுப்பினர் குமரேசன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் வெங்கடேசன், பேரூராட்சி துணை தலைவர் தளபதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்