< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மேலப்பாளையம் முஸ்லிம் பள்ளியில் 87 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
|30 Aug 2023 2:51 AM IST
மேலப்பாளையம் முஸ்லிம் பள்ளியில் 87 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ஜமால் உமருஸ்சமான் தலைமை தாங்கினார். மேலப்பாளையம் முஸ்லிம் மகளிர் கல்விச்சங்க தலைவர் நூர்ஜகான் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை கதீஜா பானு வரவேற்றார். பள்ளி தாளாளர் பரக்கத் உம்மா பேசினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிளஸ்-2 படித்து வரும் 87 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.