< Back
மாநில செய்திகள்
223 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
தென்காசி
மாநில செய்திகள்

223 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

தினத்தந்தி
|
11 Oct 2022 12:15 AM IST

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 223 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

சிவகிரி:

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், மகாஜன சங்கத்தின் துணைத்தலைவர் மூக்கையா, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.

வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார் 108 மாணவர்களுக்கும், 115 மாணவிகளுக்கும் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் சிவகிரி நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், வாசுதேவநல்லூர் ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார், புளியங்குடி நகர செயலாளர் ஜாகிர் உசேன், வாசுதேவநல்லூர் மாரிச்சாமி, சிவகிரி நகர அ.தி.மு.க. செயலாளர் காசிராஜன், சிவகிரி நகர பஞ்சாயத்து கவுன்சிலர்கள் சித்ராதேவி, செந்தில்வேல், அருணாசலம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரேவதி மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். உதவி தலைமையாசிரியை சுப்புலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்