< Back
மாநில செய்திகள்
192 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
விருதுநகர்
மாநில செய்திகள்

192 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
31 Aug 2022 2:20 AM IST

192 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் சிவந்திபட்டி நாடார் உறவின்முறை மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தனுஷ் குமார் எம்.பி., மம்சாபுரம் பேரூராட்சி தலைவர் சுஜிதா மேரி தங்க மாங்கனி ஆகியோர் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் தங்க மாங்கனி, பேரூராட்சி தி.மு.க. செயலாளர் உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் 192 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. அதேபோல மல்லி ஊராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மல்லி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் வழங்கினார்.


மேலும் செய்திகள்