< Back
மாநில செய்திகள்
1,860 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
திருவாரூர்
மாநில செய்திகள்

1,860 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

தினத்தந்தி
|
16 Sept 2022 12:15 AM IST

திருத்துறைப்பூண்டியில் 1,860 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை மாரிமுத்து எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருத்துறைப்பூண்டி:

தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 15 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 1,860 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா திருத்துறைப்பூண்டி தூய தெரசாள் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு வரவேற்றார். மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், தலைமை ஆசிரியை அல்போன்ஸ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,860 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஷ், நகரமன்ற உறுப்பினர் ரெஜினாபானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்