திருநெல்வேலி
பள்ளிகளில் 164 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
|இட்டமொழி, ரெட்டியார்பட்டி பள்ளிகளில் 164 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இட்டமொழி:
இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளி, ரெட்டியார்பட்டி கு.ரா.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 164 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும் 10, 11, 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெ.நம்பித்துரை, ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ராஜன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்போர்டு, வட்டாரத்தலைவர்கள் கணேசன், கனகராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஜெகன், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், கட்சி நிர்வாகிகள் ஞானராஜ், லிங்கராஜ், சித்திரைவேல், ராஜகோபால், வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரலாம் என்ற செய்தியை அறிந்ததும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., களக்காடு, மாவடியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.