கிருஷ்ணகிரி
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
|ஊத்தங்கரையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் கலந்துகொண்டு 431 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார். இதில் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், ரஜினிசெல்வம், எக்கூர் செல்வம், நகர செயலாளர் பாபு சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், தேவராசன், மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, நரசிம்மன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சந்திரன், டாக்டர் கந்தசாமி, மிட்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் கமலநாதன், நகர அவைத்தலைவர் தணிகை குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுவாமிநாதன் முன்னிலையில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் வழங்கினார். கல்லாவி, சிங்காரப்பேட்டை, பெரியதள்ளப்பாடி, காரப்பட்டு ஆகிய பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.