< Back
மாநில செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

தினத்தந்தி
|
24 Aug 2022 4:52 PM GMT

கே.திப்பனப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

வேப்பனப்பள்ளி ஒன்றியம் பில்லனகுப்பம் ஊராட்சி கே.திப்பனப்பள்ளி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் 200 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன், செயலாளர் சதாசிவம், பொருளாளர் பால்ராஜ், மேலாண்மை குழு தலைவர் முத்தம்மா முனிரத்தினம், ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி சிவராஜ், துணைத்தலைவர் சிவசுப்பிரமணியம், மாவட்ட இலக்கிய அணி ராஜசேகர், முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்