< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - 20-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

11 April 2023 4:07 PM IST
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு வரும் 20-ந்தேதி தொடங்குகிறது.
சென்னை,
இந்திய அரசு 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்க 'குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009' என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் ஏப்ரல் 1, 2010 முதல் அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அல்லாதவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மொத்த இடங்களில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு வரும் 20-ந்தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்கள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன.