< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
இலவச செயல்வழி முன்பருவ கல்வி மையம்
|13 Sept 2022 12:30 AM IST
காவேரிப்பட்டணம் குழந்தைகள் இல்லத்தில் இலவச செயல்வழி முன்பருவ கல்வி மையத்தை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்.
காவேரிப்பட்டணம்:-
காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜின்னா ரோடு குழந்தைகள் இல்லத்தில் அமீகா அறக்கட்டளை சார்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்.
மேலும் இலவச செயல்வழி முன்பருவ கல்வி மையத்தை தொடங்கி வைத்தார். நிர்வாக அறங்காவலர்கள் லட்சுமி ராமமூர்த்தி, தர்மராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார மேற்பார்வையாளர் பரிதா பேகம் வரவேற்றார். இந்த மையம் மூலம் கதை சொல்லுதல், திட்டமிட்ட விளையாட்டு, மாதம் ஒரு தலைப்பில் கலந்துரையாடல் ஆகியவை மூலம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, வட்டார கல்வி அலுவலர்கள் சம்பத். சபிஷ் ஜான், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சக்தி, ராம்கோ நிறுவன அலுவலர்கள் சங்கர் தயாள், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.