< Back
மாநில செய்திகள்
பைக் டாக்சி ஓட்டும் நபர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல்... வீடியோ வெளியிட்டு இளைஞர் எச்சரிக்கை
மாநில செய்திகள்

பைக் டாக்சி ஓட்டும் நபர்களை குறிவைத்து ஏமாற்றும் மோசடி கும்பல்... வீடியோ வெளியிட்டு இளைஞர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
5 Aug 2024 3:56 AM IST

பைக் டாக்சி ஓட்டும் நபர்களை குறிவைத்து நூதன முறையில் மோசடி கும்பல் ஏமாற்றுவதாக இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் பைக் டாக்சி ஓட்டும் இளைஞர்களை, சைபர் கிரைம் மோசடி கும்பல் ஒன்று நூதன முறையில் ஏமாற்றுவதாக ராபிடோ ஓட்டும் இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார். இந்த மோசடி பெரும்பாலும் இரவு நேரங்களில் நடைபெறுவதாக கூறி அந்த இளைஞர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தனது சகோதரி மற்றும் குடும்பத்தாருக்காக புக் செய்து சவாரிக்கு அழைக்கும் கும்பல், பின்னர், அப்பெண்கள் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனதென தெரிவித்து, தாங்கள் ஜிபேயில் அனுப்பும் ரூபாயை சவாரிக்கு எடுத்துக் கொண்டு மீதத்தை அப்பெண்ணின் கையில் கொடுத்து விடும்படி கூறுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜிபேயில் பணம் அனுப்பாமல் பணம் அனுப்பியது போன்று நூதன முறையில் மெசேஜை மட்டும் அனுப்புவதாகவும், இதனால் விவரம் அறியாத பலர் மோசடி கும்பல் கூறியதுபோலவே பணத்தை அனுப்பி ஏமாறுவதாகவும் இளைஞர் குற்றம்சுமத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்