< Back
மாநில செய்திகள்
கோடிக்கணக்கில் மோசடி:  தனியார் நிறுவனம் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
மதுரை
மாநில செய்திகள்

கோடிக்கணக்கில் மோசடி: தனியார் நிறுவனம் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தினத்தந்தி
|
15 March 2023 1:59 AM IST

கோடிக்கணக்கில் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.


மதுரை சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. இவர் உள்ளிட்ட சிலர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் மதுரை பைக்காராவில் இயங்கி வந்த தனியார் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம், மாதம் நல்ல வருமானம் வரும் என்று அறிமுகம் செய்தனர். பின்னர் அந்த நிறுவனத்தின் தலைவர் ஜெயராஜ் எங்களை நிறுவனத்தில் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 7,500 ரூபாய் தரப்படும் என்று தெரிவித்தார். அதன்படி என்னை போன்று பலர் பணத்தை முதலீடு செய்தனர். அப்படி முதலீடு செய்தவர்களுக்கு முதல் 2 மாதம் பணம் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். பின்னர் அலுவலகத்திற்கு சென்று கேட்டால் பணத்தை தருவதாக இழுத்தடித்து கொண்டிருந்தார். இவ்வாறு அவர் பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. எனவே அந்த நிறுவனத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்