< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாமக்கலில் மாந்திரீகம் செய்வதாக மோசடி - மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு
|28 Aug 2022 4:17 AM IST
மாந்திரீகம் என்ற பெயரில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பாப்பாயி. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டினுள் சென்ற மர்ம நபர்கள் சிலர், மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாந்திரீகம் என்ற பெயரில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.