< Back
மாநில செய்திகள்
விவசாயியிடம் ரூ.80 ஆயிரம் மோசடி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

விவசாயியிடம் ரூ.80 ஆயிரம் மோசடி

தினத்தந்தி
|
29 Nov 2022 12:15 AM IST

விவசாயியிடம் ரூ.80 ஆயிரம் மோசடி செயதவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே பெத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 48).விவசாயி. இவரிடம் நீலகிரி மாவட்டம் ஓரநல்லி பாலக்கோலா கிராமத்தை சேர்ந்த சுதர்சன் என்பவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் உங்கள் மகன் மனோஜ்குமார் என்பவருக்கு சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க சேர்த்து விடுகிறேன். இதற்காக ரூ. 80 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். அதனை நம்பிய குமார், சுதர்சன் கூறியபடி அவரது வங்கி கணக்கிற்கு ரூ.80 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் சுதர்சன் கூறியபடி குமாரின் மகனுக்கு கல்லூரியில் படிப்பதற்கு சீட் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சுதர்சன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்