< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிரெடிட் கார்டில் கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறி ரூ.57 ஆயிரம் மோசடி
|29 Sept 2023 3:03 PM IST
சென்னையில் கிரெடிட் கார்டில் கடன் தொகையை அதிகரித்து தருவதாக கூறி 57 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வரும் இவர், கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகரிப்பது தொடர்பாக வங்கியில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கியில் இருந்து பேசுவதாகவும் கிரெடிட் கார்டு கடன் தொகை அதிகரித்து தருவதாகவும் கூறி ஓடிபியை கேட்டுள்ளார்.
அலெக்சாண்டரும் தனது செல்போன் எண்ணிற்கு வந்த ஓடிபியை கூற சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 57 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இது குறித்து அலெக்சாண்டர் அளித்த புகாரின் பேரில் புழல் காவல்நிலைய போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.