< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
17 Nov 2022 8:12 PM GMT

பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

தில்லைநகர்:

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆன்லைன் வர்த்தகம்

திருச்சி உறையூர் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(வயது 51). இவருடைய மகன் தினேஷ், துபாயில் பணியாற்றி வருகிறார். அவருடன் புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த்குமார் என்ற வாலிபரும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தமிழ்ச்செல்வியிடம் அரவிந்த்குமார் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய தமிழ்ச்செல்வி, அரவிந்த்குமார் கூறியபடி நெல்லையை சேர்ந்த இஸ்மாயில் என்பவரது வங்கி கணக்கில் ரூ.7 லட்சம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அரவிந்த்குமாரின் உறவினர் சோபனாவிடம் நேரில் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார்.

ரூ.9 லட்சம் மோசடி

ஆனால் அவர்கள் ரூ.9 லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வி பலமுறை அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடும்படி, மதுரை ஐகோர்ட்டில் தமிழ்ச்செல்வி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரணை செய்த கோர்ட்டு, இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திருச்சி உறையூர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் இஸ்மாயில், அரவிந்த்குமார், ஷோபனா ஆகிய 3 பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்