< Back
மாநில செய்திகள்
ஆன்லைன் வியாபாரத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

ஆன்லைன் வியாபாரத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
2 Aug 2023 12:37 AM IST

ஆன்லைன் வியாபாரத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

ஆன்லைன் வியாபாரத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கூறி பெண்ணிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

ஆன்லைன் வியாபாரம்

திருச்சி உலகநாதபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி ரம்யா (வயது 32). இவரிடம் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்த பிரசன்னகுமார் என்பவர் செல்போனில் பேசி அறிமுகமாகி உள்ளார்.

பின்னர் அவர், ரம்யாவிடம் ஆன்லைன் வியாபாரத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ரம்யா பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்தை நெட் பேங்கிங் மூலம் அந்த நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன்பிறகு அவர் லாபத் தொகையை கொடுக்கவில்லை. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டபோது, அதையும் கொடுக்க மறுத்துவிட்டார்.

வழக்குப்பதிவு

இது குறித்து ரம்யா மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின்பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்