< Back
மாநில செய்திகள்
ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
மதுரை
மாநில செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

தினத்தந்தி
|
13 Sept 2023 1:59 AM IST

ஏலச்சீட்டு நடத்தி ரூ.60 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் ரோடு ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதில் தென்பரங்குன்றம், சித்திவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பாப்பபையன் என்பவர் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் தெரிவித்திருந்தனர். இது குறித்து பாண்டித்துரை கூறும் போது, நான் என்னுடைய குடும்ப சொத்தை விற்று ரூ.4 லட்சம் 30 ஆயிரம் வைத்திருந்தேன். அப்போது பாப்பபையன் ஏலச்சீட்டில் பணம் போடும்படி கூறினார். நானும் அந்த பணத்தை அவரிடம் கொடுத்தேன். அதற்காக அவர் மாதம் 955 ரூபாய் வழங்கி வந்தார். இந்த நிலையில் ஏலச்சீட்டு முடியும் தருவாயில் அவரது வீடு பூட்டப்பட்டு உள்ளது. மேலும் எனக்கு தர வேண்டிய ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் ஏலச்சீட்டு இரு தொகை ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவற்றை கொடுக்கவில்லை. இது குறித்து அவரது மகனிடம் கேட்ட போது தனது அப்பா எங்கோ சென்று விட்டார் என்று கூறினார். எனவே என்னை போன்று பலரிடம் அவர் பணத்தை பெற்று கொண்டு அவர் தலைமறைவாகி விட்டார். எங்களுக்கு அவர் சுமார் ரூ.60 லட்சம் வரை தரவேண்டி உள்ளது. எனவே அந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளோம் என்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்