< Back
மாநில செய்திகள்
பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5 லட்சம் மோசடி
சேலம்
மாநில செய்திகள்

பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
20 Jun 2023 7:18 PM GMT

வேலை தருவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் 5 லட்சம் மோசடி

வேலை தருவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் 5 லட்சம் மோசடிசெய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுதி நேர வேலை

சேலம் மணியனூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் திவ்யா (வயது 36). இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை நம்பி அவர் தனது இ-மெயில் மூலம் விண்ணப்பித்து உள்ளார். பின்னர் அவரது செல்போன் எண்ணுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பணம் கட்டினால் வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

இதை நம்பி அவர்கள் கூறிய வங்கி கணக்கில் பல தவணைகளில் ரூ.2 லட்சத்து 74 ஆயிரம் கட்டி உள்ளார். ஆனால் வேலை கிடைக்க வில்லை. பின்னர் தொடர்பு கொண்ட போது செல்போன் எண்கள் துண்டிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. பின்னர் பண மோசடி நடந்தது தெரிய வந்தது.

வேலை கிடைக்க வில்லை

இதே போன்று சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (28). இவருடைய செல்போன் எண்ணுக்கும் பகுதி நேர வேலை இருப்பதாக வந்த குறுஞ்செய்தியை நம்பி அவர் 2 லட்சத்து 32 ஆயிரத்தை மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். ஆனால் அவருக்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து திவ்யா, வீரமணிகண்டன் ஆகிய 2 பேரும் சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை தருவதாக கூறி நூதன முறையில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்