கோயம்புத்தூர்
பெண்ணை ஏமாற்றி ரூ.5 லட்சம் மோசடி
|கோவையில் பிட்காயின் முதலீட்டில் லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் பிட்காயின் முதலீட்டில் லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிட்காயின் முதலீடு
கோவை சுப்பிரமணியபுரம் ஜி.வி.டி. லே அவுட்ைட சேர்ந்தவர் அழகு மீனாட்சி(வயது 48). இவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கூகுள் மேப் குறித்து ஆய்வு செய்தால், பணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதைத்தொடர்ந்து அழகு மீனாட்சி, குறுந்தகவல் வந்த எண்ணுக்கு பதில் அனுப்பினார். அதன் மூலம் அவருக்கு ரூ.150 கிடைத்தது. அதன்பின்னர் அந்த எண் மூலம் அழகு மீனாட்சி ஒரு டெலிகிராம் குழுவில் இணைக்கப்பட்டார். அதில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர், பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ரூ.5 லட்சம் மோசடி
இதைத்தொடர்ந்து அழகு மீனாட்சி 12 முறை அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ.5 லட்சத்து 2 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால் அந்த நபர் கூறியபடி லாப தொகையை தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. இதன் காரணமாக தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அழகு மீனாட்சி, கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுமக்கள் இதுபோன்ற ஆன்லைன் தகவலை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும், ஆரம்பத்தில் சிறிய தொகையை கொடுத்து அதன்பிறகு பெரிய தொகையை உங்களிடம் இருந்து பறித்து கொள்வார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.