திருச்சி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி
|வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டள்ளது.
திருச்சி ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாரதி கண்ணன் (வயது 59). இவர் வெளிநாட்டுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் இடைத்தரகராக பணியாற்றி வருகிறார். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நியூ லைட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை பாரதி கண்ணன் வெளிநாடு செல்வதற்கு 24 பேருக்கு விசா பெற்று தருமாறு சுப்பிரமணியனிடம் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் வழங்கி உள்ளார். அப்போது, சுப்பிரமணியன் அவர்களுக்கு போலி விசா வழங்கியதாக தெரிகிறது.இதை கண்டுபிடித்த பாரதி கண்ணன் பணத்தை திரும்ப தருமாறு சுப்பிரமணியனிடம் கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை சுப்பிரமணியன் திருப்பி வழங்கினார். ஆனால் அவர் மீதமுள்ள ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்தை திரும்பி வழங்கவில்லை. இதை கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாரதி கண்ணன் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.