< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.32 லட்சம் மோசடி - போலீசில் தொழில் அதிபர் புகார்
|27 May 2023 6:23 AM IST
சென்னையில் வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.32 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் தொழில் அதிபர் புகாரளித்துள்ளார்.
திரு.வி.க. நகர்,
சென்னை சவுகார்பேட்டை ரமணன் சாலையைச் சேர்ந்தவர் கமல் சந்த் ஜெயின் (வயது 56). தொழில் அதிபரான இவர், ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது;-
அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் டி.வி.எஸ். அவென்யூ 37-வது தெருவில் உள்ள எனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை பார்த்தசாரதி என்பவர் ஆக்கிரமித்ததுடன், தான் ஊரில் இல்லாதபோது முதல் தளம் மற்றும் 2-வது தளத்தில் உள்ள 4 வீடுகளை தலா ரூ.8 லட்சம் வீதம் குத்தகைக்கு விட்டு ரூ.32 லட்சம் பெற்றுக்கொண்டார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
அந்த புகாரின் பேரில் ஜெ.ஜெ. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.