< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
17 April 2023 6:45 PM GMT

திண்டிவனத்தை சேர்ந்த என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

விழுப்புரம்

என்ஜினீயர்

திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் டினோத்பாபு(வயது 24), என்ஜினீயர். இவருடைய செல்போனை வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தான் தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், பகுதிநேர வேலை விஷயமாக கூறி ஒரு குறுஞ்செய்தியையும், லிங்கையும் அனுப்பியுள்ளார்.

உடனே டினோத்பாபு, அந்த லிங்கிற்குள் சென்று தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்டை பதிவு செய்தார். பின்னர் அந்த நபர், டெலிகிராம் ஐடியில் இருந்து பகுதிநேர வேலையாக சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்ததும், அதிக லாபம் பெறலாம் என்று கூறினார்.

ரூ.2 லட்சம் மோசடி

இதை நம்பிய டினோத்பாபு, தனது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட போன்பே, பேடிஎம் மூலம் 20 தவணைகளாக அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 128-ஐ அனுப்பி வைத்துள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும், டினோத்பாபுக்கு சேர வேண்டிய தொகையை தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து டினோத்பாபு, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்