< Back
மாநில செய்திகள்
ஜெனரேட்டர் தருவதாக ஆந்திர தொழில் அதிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி - பெண் கைது
சென்னை
மாநில செய்திகள்

ஜெனரேட்டர் தருவதாக ஆந்திர தொழில் அதிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி - பெண் கைது

தினத்தந்தி
|
1 Jan 2023 11:48 AM IST

ஜெனரேட்டர் தருவதாக ஆந்திர தொழில் அதிபரிடம் ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் பைரோ பாட்ஷா (வயது 45). தொழில் அதிபரான இவர், சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். தனது நிறுவனத்துக்கு ஜெனரேட்டர் தேவைப்பட்டதால் ஆன்லைனில் வந்த விளம்பரத்தைச் பார்த்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொண்டார். போனில் பேசிய அகல்யா என்ற பெண், தங்கள் கம்பெனியில் தரம் வாய்ந்த ஜெனரேட்டர் குறைந்த விலைக்கு இருப்பதாக கூறினார். இதை நம்பிய ஷேக் பைரோ பாட்ஷா, ஜெனரேட்டர் வாங்குவதற்காக 6 தவணைகளாக ரூ.16 லட்சத்தை வங்கி மூலம் செலுத்தினார். ஆனால் அதன்பிறகு ஜெனரேட்டரை தராமல் இழுத்தடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த ஷேக் பைரோ பாட்ஷா, அம்பத்தூருக்கு நேரில் வந்து பார்த்தபோது அந்த முகவரியில் அப்படி ஒரு கம்பெனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அகல்யாவை போனில் தொடர்பு கொண்ட அவர், தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு அகல்யா, பணமும் கிடையாது. பொருளும் கிடையாது என்றதுடன் கொைல மிரட்டலும் விடுத்தார்.

இதுபற்றி அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசில் ஷேக் பைரோ பாட்ஷா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அகல்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்