< Back
மாநில செய்திகள்
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி  தறித்தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் மோசடி  சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலம்
மாநில செய்திகள்

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி தறித்தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
3 Nov 2022 2:06 AM IST

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி தறித்தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

தறித்தொழிலாளி

கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35), தறித்தொழிலாளி. இவர் தனது செல்போன் எண்ணிற்கு முகநூலில் வந்த நிறுவனம் ஒன்றின் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்தார். அதில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பி அவர் முதலில் அந்த நிறுவனத்தில் ரூ.100 முதலீடு செய்தார்.

இதையடுத்து அவருக்கு ரூ.250 கிடைத்தது. அதைத்தொடர்ந்து சிறிது, சிறிதாக பணம் முதலீடு செய்த அவருக்கு இரட்டிப்பாக தொகை கிடைத்தது. பின்னர் கோபிநாத் பல்வேறு வங்கிகளில் ரூ.10 லட்சத்து 23 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பணம் ஏதும் வரவில்லை.

போலீஸ் விசாரணை

இதையடுத்து அவர் ஆன்லைனின் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த கோபிநாத் இதுகுறித்து சேலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்