< Back
மாநில செய்திகள்
பட்டதாரி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

பட்டதாரி பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
10 March 2023 12:36 AM IST

விமான நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி திருச்சியை சேர்ந்த பட்டதாரி பெண்ணிடம் ரூ.1 லட்சம் பெற்று மோசடி செய்தது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி திருச்சியை சேர்ந்த பட்டதாரி பெண்ணிடம் ரூ.1 லட்சம் பெற்று மோசடி செய்தது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பட்டதாரி பெண்

திருச்சி ெந.1 டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த குணசேகரன் மகள் கிருபாநந்தினி (வயது 26). மயக்கவியல் பட்டதாரியான இவர், கடந்த ஆண்டு மருத்துவ துறையில் மயக்கவியல் பிரிவில் வேலைக்காக பிரபல இணையதளத்தில் தனது சுயவிவரங்களை பதிவு செய்து வைத்திருந்தார். அதை பார்த்த மர்ம ஆசாமி ஒருவர், அந்த இணையதளத்தில் இருந்து கிருபாநந்தினியின் செல்போன் எண்ணை எடுத்து அவரை தொடர்பு கொண்டார்.

அப்போது, ஏர்ஏசியா விமான நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், அந்த வேலையை உங்களுக்கு பெற்றுக்கொடுக்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். பின்னர், உங்களை பற்றி விசாரிக்க வேண்டும், உங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று பல்வேறு காரணங்களை கூறி அவருடைய செல்போன் எண்ணுக்கு கியூஆர் கோடு ஒன்றை அனுப்பி, அதற்கு பணம் அனுப்பும்படி அந்த ஆசாமி கூறியுள்ளார்.

ரூ.1 லட்சம் மோசடி

அதை நம்பி கிருபாநந்தினி ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 947 வரை அவருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அந்த ஆசாமி வேலை வாங்கி கொடுக்கவில்லை. அதன்பிறகு, அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அப்போது தான், அந்த ஆசாமி வேலை வாங்கி கொடுப்பதாக கூறி தன்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்தது கிருபாநந்தினிக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருபாநந்தினி, இதுபற்றி திருச்சி மாவட்ட சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்