< Back
மாநில செய்திகள்
பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.1¾ கோடி மோசடி
கரூர்
மாநில செய்திகள்

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.1¾ கோடி மோசடி

தினத்தந்தி
|
2 May 2023 7:27 PM GMT

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது.

ரூ.1¾ கோடி மோசடி

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா, பெரியாண்டார் வீதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் எனது கணவரை இழந்து 2 மகன்களுடன் வசித்து வருகிறேன். எனக்கும், எனது மகன்களுக்கும் கண்டம் இருப்பதாகவும், உறவினர்கள் பில்லி சூனியம் வைத்திருப்பதாகவும் மலையாள மாந்திரிகர் ஒருவர் கூறினார்.

இதையடுத்து, எனது உறவினரின் ஒத்துழைப்போடு அந்த சாமியாரை வைத்து கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஒவ்வொரு முறையும், பூஜைக்கு பரிகாரம் செய்ய ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மொத்தம் ரூ.1 கோடியே 82 லட்சத்து 24 ஆயிரத்து 493 கொடுத்துள்ளேன். இதனால் நான் கடனாளியாகி மிகவும் சிரமம் அடைந்து வருகிறேன்.

பணத்தை மீட்டு தர வேண்டும்

இதுகுறித்து சாமியாரை அணுகி கேட்டதற்கு கொடுத்த பணத்திற்கு பரிகாரம் முடிந்துவிட்டது. அதனால் தான் நீயும், உன் குழந்தைகளும் உயிருடன் இருக்கிறீர்கள் என்று கூறுகிறார். மேலும் இதுசம்பந்தமாக என்னிடம் வரக்கூடாது என்றும், நீ என்னிடம் கொடுத்த பணத்தை கேட்டால் மாந்திரீக சக்தியால் உன்னை குடும்பத்தோடு அழித்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். இதுகுறித்து எனது உறவினரிடம் கூறியபோது, இதுகுறித்து பேசக்கூடாது என்று மிரட்டுகிறார்.

எனவே என்னிடம் பணம் மோசடி செய்த அவர்கள் 2 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்