புதுக்கோட்டை
நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு
|நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் சிலர் வந்தனர். புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்த 2 பேர் பல பேரிடம் பணத்தை பெற்று ரூ.1 கோடி வரை மோசடி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதில் பணத்தை இழந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். புகார் மனு தொடர்பாக அவர்கள் கூறுகையில், ''நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் எனவும், மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு வட்டி தொகை தருவதோடு, தவணை காலம் முடிந்ததும் முதிர்வு தொகை வழங்கப்படும் என கூறினர். இதனை நம்பி லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்தோம். முதல் 3 மாதங்கள் வட்டி தந்த நிலையில் அதன்பிறகு வட்டியும் தரவில்லை. முதிர்வு கால தொகையையும் திருப்பி வழங்கவில்லை. அதனை கேட்ட போதும் அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் புகார் மனு அளித்தோம்'' என்றனர்.