< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பகுதி நேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி
|14 Aug 2023 12:24 PM IST
பகுதி நேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், காமராஜர் சாலையை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் வழியாக பகுதி நேர வேலை தேடினார். அப்போது தனியார் செயலி மூலம் அறிமுகமான ஒருவர் மூலமாக பகுதி நேர வேலைக்கு சேர்ந்தார். அந்த நபர் கூறியதுபோல் சில வங்கி கணக்கிற்கு 2 தவணையாக ரூ.55 ஆயிரம் செலுத்தினார். அந்த பணம் வட்டியுடன் திரும்ப கிடைக்கும் என கூறியதாகவும் தெரிகிறது.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர் செலுத்திய பணம் எதுவும் அவரது வங்கி கணக்கிற்கு திரும்பி வரவில்லை. இந்த நூதன மோசடி குறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.