< Back
மாநில செய்திகள்
பிட் காயின் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி
சேலம்
மாநில செய்திகள்

பிட் காயின் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி

தினத்தந்தி
|
4 Aug 2022 7:12 PM GMT

சேலத்தில் பிட் காயின் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

சேலம் கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த ரமேஷ் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் துணை கமிஷனர் மாடசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில், கருப்பூர் பகுதியை சேர்ந்த ஒருவர் எங்களிடம் பிட்காயின் மூலம் அதிக பணம் ஈட்டித்தருவதாக ஆசை வார்த்தை கூறினார். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமையை தவிர மற்ற நாட்களில் ரூ.1,000 தருவதாக தெரிவித்தார்.

இதை நம்பி அவரிடம் பல லட்ச ரூபாய் முதலீடு செய்தோம். சில நாட்கள் மட்டுமே ரூ.1,000 தந்தார். அதன்பிறகு அவர் பணம் தரவில்லை. இதற்கிடையில் அந்த கிராமத்தை விட்டு அவர் திடீரென வேறு இடத்துக்கு சென்றுவிட்டார். விசாரித்ததில் எங்களை போல் பலரிடம் அவர் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்