< Back
மாநில செய்திகள்
என்ஜினீயர் வங்கி கணக்கில் இருந்து ரூ.3¼ லட்சம் எடுத்து மோசடி: மர்மநபருக்கு வலைவீச்சு
கரூர்
மாநில செய்திகள்

என்ஜினீயர் வங்கி கணக்கில் இருந்து ரூ.3¼ லட்சம் எடுத்து மோசடி: மர்மநபருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
27 Aug 2022 6:53 PM GMT

கரூர் அருகே நூதன முறையில் என்ஜினீயர் வங்கி கணக்கில் இருந்து ரூ.3¼ லட்சம் எடுத்து மோசடியில் ஈடுபட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர்

கரூர் அருகே உள்ள அரிகாரம் பாளையத்தை சேர்ந்தவர் மாயவன் (வயது 34). சிவில் என்ஜினீயர். இவரது செல்போன் நம்பருக்கு வந்த குறுஞ்செய்தி லிங்கை கிளிக் செய்து பார்த்துள்ளார். அதில் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளது.

இதையடுத்து மாயவன் தன்னுடைய ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். பின்னர் மாயவன் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அந்த நம்பரையும் குறுஞ்செய்தி வந்த லிங்குடன் மாயவன் பதிவிட்டுள்ளார்.

வழக்குப்பதிவு

இதனையடுத்து மாயவன் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 528 எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. பின்னா் தனது வங்கி கணக்கில் இருந்து ேமாசடியாக பணம் திருடப்பட்டுள்ளது குறித்து மாயவன் கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்