< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1¾ லட்சம் பெற்று மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1¾ லட்சம் பெற்று மோசடி

தினத்தந்தி
|
24 April 2023 8:15 PM GMT

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1¾ லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் காந்திரோடு பகுதியில் எம்.எஸ். கன்சல்டன்சி என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக மீனாட்சி என்பவரும், அதன் மேலாளராக பாலகிருஷ்ணன் என்பவரும் இருந்தனர். இவர்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுவரை 28 பேர் மொத்தம் ரூ.50 லட்சத்துக்கு மேல் கொடுத்து ஏமாந்ததாக ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்திருந்தனர். அதன்பேரில் மீனாட்சி, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை கொடும்பம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜமணிகண்டன் (வயது 28) என்பவர், தன்னை ருமேனியா நாட்டுக்கு அனுப்புவதாக ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் பெற்று போலி பணிநியமன ஆணை வழங்கி ஏமாற்றி விட்டதாக எம்.எஸ்.கன்சல்டன்சி நிறுவனத்தினர் மீது புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் மீனாட்சி, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்