< Back
மாநில செய்திகள்
தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி
மாநில செய்திகள்

தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி

தினத்தந்தி
|
2 March 2024 10:40 PM IST

ராமநாதபுரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தங்கமுலாம் பூசிய போலி நகைகளை அடகு வைத்து நபர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், லோக்கல் பண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த திருவெம்பாலா பிரசாத் என்பவர், சுமார் 181 கிராம் நகைகளை அடமானம் வைத்து எட்டரை லட்ச ரூபாய் பணம் கடன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 16 ஆம் தேதி வங்கியில் உள்ள நகைகளை அதிகாரிகள் மதிப்பீடு செய்த போது, பிரசாத் அடகு வைத்த 181 கிராம் நகைகளும் தங்க முலாம் பூசப்பட்ட செம்பு நகைகள் என்பது தெரியவந்தது.

வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், திருவெம்பாலா பிரசாத்தை கைது செய்திருக்கும் நிலையில், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்