< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் ரூ.2 லட்சம், 6 பவுன் சங்கிலி பெற்று மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

பெண்ணிடம் ரூ.2 லட்சம், 6 பவுன் சங்கிலி பெற்று மோசடி

தினத்தந்தி
|
4 Aug 2022 1:02 AM IST

பெண்ணிடம் ரூ.2 லட்சம், 6 பவுன் சங்கிலி பெற்று மோசடியில் ஈடுபட்ட ஏலச்சீட்டு நடத்திய தம்பதி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெண்ணிடம் ரூ.2 லட்சம், 6 பவுன் சங்கிலி பெற்று மோசடியில் ஈடுபட்ட ஏலச்சீட்டு நடத்திய தம்பதி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏலச்சீட்டு

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி அன்னபூரணி (வயது 47). இவர் அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்திவரும் மகேந்திரன்-பேச்சியம்மாள் தம்பதியிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சத்துக்கு சீட்டு போட்டு இருந்தார்.

மேலும், அவர்கள் அன்ன பூரணியிடம் 6 பவுன் தங்க சங்கிலியையும் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் இதுவரை பணத்தையும், நகையையும் அவர்கள் அன்னபூரணிக்கு திருப்பி கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர், தன்னை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், மகேந்திரன்-பேச்சியம்மாள் தம்பதி உள்பட 4 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்