< Back
மாநில செய்திகள்
கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி முயற்சி - எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி முயற்சி - எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்

தினத்தந்தி
|
12 Jun 2022 12:13 PM IST

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது. எச்சரிக்கையாக இருக்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் புகைப்படத்தை வாட்ஸ்அப் டி.பி.யில் வைத்து அரசு அதிகாரிகளுக்கு ஆன்லைன் நிறுவனத்தில் பொருள் வாங்கி விட்டீர்களா இல்லை எனில் கீழே உள்ள லிங்க்கை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் போலீசாருக்கும் மாவட்ட கலெக்டருக்கும் வந்த நிலையில் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.சி.கல்யாண் உத்தரவின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் மாவட்ட கலெக்டர் புகைப்படத்தை வாட்ஸ்அப் டி.பி.யில் வைத்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதை நம்பி அதிகாரிகள், பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்போது திருவள்ளூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்