< Back
மாநில செய்திகள்
சென்னை காவல் ஆணையர் பெயரில் மோசடி முயற்சி
மாநில செய்திகள்

சென்னை காவல் ஆணையர் பெயரில் மோசடி முயற்சி

தினத்தந்தி
|
22 Sept 2024 6:58 PM IST

புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை காவல் ஆணையர் அருண் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் சென்னை காவல் ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்படம் ஆதாரத்துடன் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை காவல்துறை, சென்னை காவல் ஆணையர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்