< Back
மாநில செய்திகள்
சென்னை மேயர் பெயரில் மோசடி முயற்சி: மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
சென்னை
மாநில செய்திகள்

சென்னை மேயர் பெயரில் மோசடி முயற்சி: மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
14 July 2022 9:39 AM IST

சென்னை மேயர் பெயரில் மோசடி முயற்சி நடந்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவரது பெயரில் போலியான 'வாட்ஸ்-அப்' குழு மூலம் தவறான தகவல்களை மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு அனுப்பி, மிகப்பெரிய மோசடி முயற்சி நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மேயர் பிரியாவின் தொழில் நுட்பபிரிவு உதவியாளர் சிவசங்கர், சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனு தொடர்பாக உடனடியாக சி.எஸ்.ஆர். ரசீது வழங்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இதற்கிடையில் இந்த புகார் மனு மீதான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்