< Back
மாநில செய்திகள்
பகுதிநேர வேலை தருவதாக கூறிஎன்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.14 லட்சம் மோசடி
நாமக்கல்
மாநில செய்திகள்

பகுதிநேர வேலை தருவதாக கூறிஎன்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.14 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
15 May 2023 6:45 PM GMT

ராசிபுரத்தை சேர்ந்த என்ஜினீயரிடம் ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாப்ட்வேர் என்ஜினீயர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அசோக்குமார் (வயது27). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொரோனா காலத்திற்கு பிறகு வீட்டில் இருந்தபடியே பணி செய்து வருகிறார்.

இந்த நிலையில் மீதமுள்ள நேரத்தில் ஏதாவது ஒரு வேலை செய்யலாம் என்கிற நோக்கில் ஆன்லைனில் பகுதிநேர வேலையை தேடி உள்ளார். அப்போது அவரை வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அவருக்கு பல்வேறு டாஸ்குகளை கொடுத்து உள்ளனர்.

ரூ.14 லட்சம் மோசடி

ஒவ்வொரு டாஸ்குக்கும் குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் உங்களுக்கு கமிஷன் சேர்த்து கூடுதலாக பணம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை உண்மை என நம்பிய அசோக்குமார், பல்வேறு கட்டங்களாக ரூ.13 லட்சத்து 99 ஆயிரம் செலுத்தி உள்ளார். இந்த பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை திருப்பி செலுத்தவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

இது குறித்து அசோக்குமார் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரூ.13 லட்சத்து 99 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்