< Back
மாநில செய்திகள்
பகுதிநேர வேலை தருவதாக கூறிகல்லூரி மாணவியிடம் ரூ.1.20 லட்சம் மோசடி
நாமக்கல்
மாநில செய்திகள்

பகுதிநேர வேலை தருவதாக கூறிகல்லூரி மாணவியிடம் ரூ.1.20 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
13 April 2023 6:45 PM GMT

நாமக்கல்லில் பகுதிநேர வேலை தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி

நாமக்கல்லை சேர்ந்தவர் சாகுல்அமீது. இவரது மகள் ஷெலிகா பேகம் (வயது20). என்ஜினீயரிங் கல்லூரி மாணவி. இவர் ஆன்லைனில் பகுதிநேர வேலையை தேடி வந்தார். இதற்கு ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக தகவல் வந்தது.

மேலும் ஒரு லிங்கை அனுப்பினர். அந்த லிங்கில் கொடுக்கப்படும் டாஸ்க் மூலம் பணியை தொடர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. முதலில் டாஸ்கை செய்ய குறைந்தபட்ச தொகை செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்தது. அந்த தொகையை செலுத்தி பணியை தொடர்ந்தார்.

ரூ.1.20 லட்சம் மோசடி

இவ்வாறு 18 தவணைகளாக சிறிய, சிறிய தொகையாக ஷெலிகா பேகம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அனுப்பி உள்ளார். மேலும் பணியை தொடர பணம் அனுப்ப வேண்டும் என தகவல் வந்தது. அதற்கு ஷெலிகா பேகம் தன்னிடம் பணம் இல்லை. இதுவரை நான் அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்புங்கள் என கேட்டு உள்ளார். எந்த எவ்வித பதிலும் இல்லை.

எனவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்