< Back
மாநில செய்திகள்
பெண் என்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.9¾ லட்சம் மோசடி
நாமக்கல்
மாநில செய்திகள்

பெண் என்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.9¾ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
18 March 2023 6:45 PM GMT

நாமக்கல்லில் பகுதிநேர வேலை தேடிய பெண் என்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.9¾ லட்சத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகுதிநேர வேலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரை சேர்ந்தவர் நரேந்திரன். இவரது மனைவி திவ்யா (வயது 28). என்ஜினீயரிங் முடித்து உள்ள இவர் வீட்டில் இருந்தே பணி செய்வது போன்ற பகுதி நேர வேலையை தேடி வந்தார்.

இந்த நிலையில் இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்து உள்ளது. அதில் முதலில் பயிற்சி கொடுத்து பின்னர் பகுதி நேர வேலை தருவதாகவும், சில டாஸ்க் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். அதை உண்மை என நம்பி சிறிய, சிறிய தொகையாக அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு திவ்யா செலுத்தி உள்ளார். முதலில் அனுப்பிய பணத்தை காட்டிலும் கூடுதல் பணம் கிடைத்து உள்ளது. இந்த வகையில் அவர் ரூ.9¾ லட்சம் அனுப்பி உள்ளார். ஆனால் பின்னர் பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.

ரூ.9¾ லட்சம் மோசடி

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திவ்யா, இது குறித்து நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதில் ஆன்லைனில் ரூ.9 லட்சத்து 88 ஆயிரத்து 310 மோசடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்