< Back
மாநில செய்திகள்
வாலிபரிடம் ரூ.1.18 லட்சம் மோசடி    மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்
மாநில செய்திகள்

வாலிபரிடம் ரூ.1.18 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
5 Oct 2022 6:45 PM GMT

விழுப்புரத்தில் வாலிபரிடம் ரூ.1.18 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோட்சநாதன் மகன் ஆன்ட்ரூ (வயது 27). இவர் விழுப்புரம் பகுதியில் காலணிகள் விற்கும் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முகநூல் மூலம் அறிமுகமானார். பின்னர் அந்த நபர், ஒரு வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து ஆன்ட்ரூவை தொடர்புகொண்டு கொரோனா நிதி அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். பின்னர் கடந்த 1-ந் தேதியன்று மற்றொரு எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட நபர், டெல்லி ஏர்போர்ட்டில் இருந்து பேசுவதாக கூறி பார்சல் அனுப்பியுள்ளதாகவும், அதனை பெற பணம் அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

ரூ.1.18 லட்சம் மோசடி

இதை நம்பிய ஆன்ட்ரூ, தான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கியுடன் இணைக்கப்பட்ட தனது கூகுள்பே மூலம், அந்த நபர் கூறிய கூகுள்பே எண்ணுக்கு 3 தவணைகளில் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 400-ஐ அனுப்பி வைத்தார். ஆனால் அந்த மர்ம நபர், இதுவரை எவ்வித பார்சல் பொருளையும் ஆன்ட்ரூவுக்கு அனுப்பி வைக்காமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து ஆன்ட்ரூ, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்