< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் மோசடி
சிவகங்கை
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் மோசடி

தினத்தந்தி
|
3 Oct 2022 6:45 PM GMT

வங்கியில் இருந்து அனுப்புவது போல குறுந்தகவல் அனுப்பி ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறுந்தகவல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 3-வது வீதியை சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 74). இவர் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த 1-ந் தேதி இவரது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து வந்த தகவல் போல் இருந்தது.

இதனால் மெய்யப்பன் அந்த லிங்கை திறந்து அதில் கேட்கப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை குறிப்பிட்டிருந்தார். சிறிது நேரத்தில் அவரது கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டதை மெய்யப்பன் அறிந்தார்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நர்மதா, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்